ADDED : செப் 29, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தும் ஆடு, மாடு, பன்றி, நாய் உள்ளிட்ட கால்நடைகளின் தொல்லையால் மக்கள் பாதிப்படைகின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:
சாயல்குடி பேரூராட்சி நகர் பகுதிகள், பஜார், அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகளவு பன்றிகள் திரிகின்றன. சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் திறந்த வெளியில் வளர்க்கப்படும் பன்றிகளால் நோய்த் தொற்று ஏற்படுகிறது.
இரவு மற்றும் காலை நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை திறந்து விடுவதால் அவை மக்களுக்கு பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
