/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் சர்வேயர் வருகைக்காக பல மாதங்கள் காத்திருக்கும் மக்கள் புரோக்கர்கள் ஆதிக்கத்தால் பாதிப்பு

ADDED : அக் 18, 2024 04:59 AM
கடலாடி: கடலாடி தாலுகாவில் 42 வருவாய் கிராமங்கள் உள்ளன. நில அளவீட்டு பிரிவில் பணியாற்றும் சர்வேயர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. விண்ணப்பிக்கும் மக்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலங்களை வாங்க மற்றும் விற்பனை செய்வதற்கு உரிய முறையில் அளவீடு செய்ய சர்வேயர் பணி அவசியமானதாகும்.
சலான் கட்டி கடலாடி தாலுகா அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து காத்திருந்து செல்வதால் எங்களுடைய விவசாய பணியில் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றன. புரோக்கர்களின் தலையீட்டால் முறையான விவசாயிகளுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலை தொடர்கிறது. சில புரோக்கர்கள் சர்வேயர்களை தங்களது பிடியில் வைத்துக் கொண்டு பணம் வாங்கிக் கொண்டு காரியம் சாதிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இதனால் ஏழை எளிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பலரது சொத்துக்கள் அளவீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் எண்ணிக்கையில் சர்வேயர்கள் நியமிக்கவும், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.