/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இடையூறு கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

ADDED : ஜன 27, 2024 06:50 AM

ராமநாதபுரம், : நயினார்கோவில் ஒன்றியம் வாதவனேரி ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு இடையூறு செய்வதாக கிராம சபை கூட்டத்தினை புறக்கணித்து ஊராட்சித்தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில்போராட்டம் நடத்தினர்.
வாதவனேரி கிராமத்தில் ஊராட்சியில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகளை செய்யவிடாமல் இடையூறு செய்வதாகவும், மக்களுக்கு எந்த திட்டங்களையும்செய்ய முடியாமல் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊராட்சித்தலைவர் ராமன், மற்றும் துணைத்தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அய்யனார்கோவில் ரோடு பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு இடையூறு செய்து வருகின்றனர். இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர். கலெக்டர் இல்லாததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
இதில் ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.