/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி சட்டி ஊர்வலம்
/
நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி சட்டி ஊர்வலம்
ADDED : ஆக 07, 2025 05:16 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் 49ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் முருகன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பத்திரகாளியம்மன், அய்யனார் கோயில் உட்பட கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அக்னி சட்டி எடுத்து கோயிலுக்கு வந்தனர்.
செல்லி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழாவில் 500க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பத்மகிரி இசை பள்ளி சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் முதுகுளத்துார், துாரி, செல்வநாயகபுரம் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.