ADDED : ஜூலை 12, 2025 11:35 PM
உத்தரகோசமங்கை:திருப்புல்லாணி வட்டார வேளாண் துறை சார்பில் உத்தரகோசமங்கை அருகே உள்ள எக்ககுடி, மல்லல் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியன் தலைமை வகித்து வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருள்கள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட்டது. வேளாண்மை வணிக துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினார்.
திருப்புல்லாணி வேளாண் துணை இயக்குனர் செல்வம், வேளாண் உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி வேளாண் அலுவலர் யோகலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வம் கூறியதாவது: 15 நாட்களுக்கு ஒரு முறை வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் சென்று நலத்திட்டங்கள் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.