/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இடநெருக்கடியில் இயங்கும் வேளாண் அலுவலகம்
/
இடநெருக்கடியில் இயங்கும் வேளாண் அலுவலகம்
ADDED : பிப் 03, 2025 05:01 AM

திருவாடானை: விரிவாக்க மையத்தில் வேளாண் அலுவலகம் இயங்குவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
திருவாடானை பாரதிநகரில் வேளாண் அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட இக்கட்டடம் மிகவும் சேதமடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு பின்பக்க சுவர் இடிந்து மேற்பகுதியிலிருந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததால் அலுவலர்கள் அச்சமடைந்தனர்.
அதனை தொடர்ந்து அலுவலகம் காலி செய்யப்பட்டது. தற்போது இந்த அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் குறுகிய இடத்தில் இயங்குவதால் பல்வேறு வேலையாக வரும் விவசாயிகள் அமர்வற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
அலுவலகத்தை சீரமைத்து அங்கு அலுவலகம் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.