/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் வீணாகி வரும் வேளாண் நெல் உலர் கலங்கள்
/
கிராமங்களில் வீணாகி வரும் வேளாண் நெல் உலர் கலங்கள்
கிராமங்களில் வீணாகி வரும் வேளாண் நெல் உலர் கலங்கள்
கிராமங்களில் வீணாகி வரும் வேளாண் நெல் உலர் கலங்கள்
ADDED : ஜன 22, 2024 04:46 AM

பரமக்குடி: -பரமக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் வேளாண் பொருட்கள் உலர வைக்க பயன்படுத்தப்படும் உலர் கலங்கள் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் உள்ளிட்ட ஒன்றியங்களில் நுாற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது.
இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பணிகள் நடக்கிறது.
இங்கு பிரதானமாக நெல், மிளகாய், பருத்தி, சிறு தானியங்கள் என பயிரிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெற்கதிர்களை உலர வைத்து அடிப்பதற்கு கலன்கள் முக்கியமாக தேவைப்படுகின்றன.
மேலும் மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றை காய வைப்பதற்கும் உலர் கலன்கள் மிகுந்த பயன்பாட்டில் இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவை வீணாகி உள்ளதால் வேளாண் பொருட்களை ரோடுகளில் உலர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டூவீலர்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சறுக்கி விபத்திற்குள்ளாகின்றன. மேலும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களும் சில நேரங்களில் செல்ல முடியாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர்.
எனவே நெல் உலர் கலன்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் வேளாண் துறைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.