/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
/
முதுகுளத்துார் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : நவ 06, 2024 05:29 AM

முதுகுளத்துார்,: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் களையெடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கீழத்துாவல், காக்கூர், சாம்பக்குளம், ஏனாதி, நல்லுார், கீரனுார், சித்திரக்குடி கீழக்காஞ்சிரங்குளம், தேரிருவேலி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்கின்றனர்.
இந்த ஆண்டு பருவமழையை நம்பி விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நெல் விதைத்தனர். அதன் பிறகு மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த மூன்று நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்கிறது. தற்போது விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளன.
இதையடுத்து விவசாயிகள் களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.