/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 22, 2025 11:56 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு ராஜா தலைமை வகித்தார். 100 நாள் வேலைக்கு முழு சம்பளம் வழங்கவும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவும், 100 நாள் வேலையில் நடக்கும்முறைகேடுகளை சரி செய்யவும், பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கி தொகுப்பு வீடு வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இடமும் பட்டா வழங்கவும், திருவரங்கத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் முருகன் உட்பட விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கோரிக்கை வலியுறுத்தி முதுகுளத்துார்அருகே பிரபக்களூர், செம்பன்குடி, செல்லுார், மீசல் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.