/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கண்மாய் நீரால் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
/
உத்தரகோசமங்கை கண்மாய் நீரால் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
உத்தரகோசமங்கை கண்மாய் நீரால் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
உத்தரகோசமங்கை கண்மாய் நீரால் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
ADDED : பிப் 16, 2024 04:58 AM

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை கண்மாய் நீரால் 200 ஏக்கர்விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபுவிடம் நான்கு கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
உத்தரகோசமங்கை கண்மாயில் தண்ணீர் நிறைந்து விவசாய நஞ்சை நிலங்களில் தேங்கியுள்ளது. மாலங்குடி, மல்லல், மேலச்சீத்தை, கோவிலன் சாத்தான் மூஞ்சன், சிறுநாங்குநேரி ஆகிய கிராமங்களில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரகோசமங்கை கண்மாய் பகுதியில் மேல் கரை அமைக்க வேண்டும்.
கீழ் கரை பகுதியில் தண்ணீர் செல்லும் கலுங்கு பகுதியை உயர்த்தி கட்டியுள்ளதால் தண்ணீர் தேங்கி விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
நேரடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்கு கிராம மக்கள் ஆர்.டி.ஓ., கோபுவிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துஉள்ளனர்.