ADDED : ஏப் 07, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
கமுதி: முதுகுளத்துார் தொகுதி கமுதி மேற்கு ஒன்றியம் கீழராமநதி, காவடிப்பட்டி, நீராவி, எம்.எம்.கோட்டை, கோரைபள்ளம், தலைவன் நாயக்கன்பட்டி, திருச்சிலுவையாபுரம், கிளாமரம், ராமசாமிபட்டி, நெடுங்குளம், பெருமாள்குடும்பன் பட்டி, முஷ்டக்குறிச்சி, முதல்நாடு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிராமங்களில் தடையின்றி குடிநீர் வழங்கவும், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். எம்.பி., தர்மர், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், பா.ஜ.,மாவட்ட துணைத்தலைவர் கணபதி, த.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன் உட்பட பங்கேற்றனர்.
