ADDED : அக் 06, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நகர் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார்.
விருதுநகர் மண்டல ஐ.டி. விங் துணைச் செயலாளர் வெண்ணிலா சசிகுமார் சிறப்புரையாற்றினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகள் பேசினர்.
விருதுநகர் மண்டல ஐ.டி., விங் செயலாளர் சரவணகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.