/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அ.தி.மு.க., கவுன்சிலரின் கேள்விக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் எதிர்ப்பு பரமக்குடி ஒன்றிய கூட்டத்தில் காரசாரம்

ADDED : டிச 21, 2024 07:17 AM
பரமக்குடி : பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் எழுப்பிய கேள்வியால் தி.மு.க., ஒன்றியச் செயலாளர் ஆவேசம் அடைந்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் சிந்தாமணி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., அன்புக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசியதாவது:
கடந்த ஆண்டுகளில் பொது நிதி எவ்வளவு வந்தது என தெரியவில்லை. தொடர்ந்து திட்டப் பணிகள் நடக்காத நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகளில் பல பி.டி.ஓ.,க்கள் மாற்றப்பட்டனர். இதற்காக தி.மு.க., அரசை கண்டிக்கிறேன் என்றார்.
அப்போது அங்கிருந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி எழுந்து, அரசை ஏன் கண்டிக்க வேண்டும். அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தான் தலைவர், துணைத்தலைவராக உள்ளனர் என்றார்.
இந்நிலையில் அவருக்கு பேச உரிமை இல்லை என தெரிவித்ததால் பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தியை அமரச் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொது நிதி நிலை வாசிக்கப்பட்டது. ஊராட்சிகளுக்கான 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடைசி கூட்டத்துடன் அனைத்து கவுன்சிலர்களும் விடை பெற்றனர்.