/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : டிச 25, 2024 03:50 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டுஅவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார். நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரண்மனை அருகேமாவட்டச்செயலாளர் முனியசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் நகரச்செயலாளர் பால்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கீழக்கரை ஹிந்து பஜாரில் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சரவண பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் சுரேஷ், நகர் துணைச் செயலாளர் குமரன், நகர் பொருளாளர் அரி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஏர்வாடி அ.தி.மு.க., சார்பில் கிளை செயலாளர் அஜ்முல் ரகுமான், ஒன்றிய அவைத் தலைவர் செய்யது அகமது, தர்கா செயலாளர் லெவ்வை கனி, முஜிபுர் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.
* சாயல்குடி அ.தி.மு.க., நகர் மற்றும் ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், ராஜேந்திரன், நகர் செயலாளர் ஜெயபாண்டியன், அவைத் தலைவர் பெரியசாமி, மாரியப்பன், முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில் சனவேலியில் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையிலும், ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப்பாலைக்குடியில் ஒன்றிய செயலாளர் திருமலை தலைமையிலும் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதே போல் ஆர்.எஸ்.மங்கலத்தில் நகர் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* கமுதியில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் தமிழ்வாணன் உட்பட பலர் மலர் துாவி மரியாதை செய்தனர்.
இதேபோன்று முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் உருவ படத்திற்கு எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர் பாண்டியன், முதுகுளத்துார் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.