/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 240 பேர் கைது
/
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 240 பேர் கைது
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 240 பேர் கைது
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 240 பேர் கைது
ADDED : டிச 31, 2024 04:31 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். 'யார் அந்த சார்' என்ற பேனருடன் விருதுநகர் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார் கொண்ட குழுவினர் ரோட்டில் கோஷமிட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்யும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட, மாநில நிர்வாகிகள் உட்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, ராமநாதபுரம் நகரச்செயலாளர் பால்பாண்டி, ராமநாதபுரம் தொகுதி இணைச்செயலாளர் தஞ்சி சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.