/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் ஜன.28ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
ராமேஸ்வரத்தில் ஜன.28ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 26, 2025 06:42 AM
சென்னை : 'தி.மு.க., அரசை கண்டித்து, நாளை மறுநாள் (ஜன.28ல்) ராமேஸ்வரத்தில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள சாலைகள் பழுதடைந்துஉள்ளன. தெருவிளக்குகள்எரிவதில்லை. குடிநீர் வினியோகமும் சரியாக இல்லை. இதனால்ராமஸ்வரம் வாழ் மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களும், மருந்துகளும் இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அரசு, இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து வருகிறது.
ராமேஸ்வரம் நகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஜன., 28ல் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்படநிர்வாகிகள் பலர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

