ADDED : ஜன 23, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா, எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஆனிமுத்து ஆகியோர் பேசினர்.
கொள்கை பரப்புச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு, விலைவாசி உயர்வுக்கு தி.மு.க., அரசே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
ஒன்றியச் செயலாளர்கள் ராஜா, திருமலை, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஷாஜகான், நகர் செயலாளர் ரஹ்மத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

