/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
ADDED : அக் 10, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் அரண்மனை ரோட்டில்எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார், சுகாதார ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.