ADDED : செப் 08, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லுாரியில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் முகமது நைனா எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.
ஏற்பாடுகளை கல்லுாரியின் ரெட் ரிப்பன் க்ளப் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பாளர் சுகந்தி ஜெனிபா ஆகியோர் செய்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ––––
