/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
ADDED : செப் 26, 2024 04:46 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடந்த சுவரொட்டிகளுக்கான ஓவியம் தயாரித்தல் போட்டியில் 10 பள்ளிகளில் இருந்து முதல் 3 இடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.4000, மூன்றாம் பரிசாக ரூ.3000 வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மாவட்ட திட்ட மேலாளர் ஏ.முருகேசன், சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, ஐ.சி.டி.சி., ஆலோசகர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.