/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் விழா கொண்டாடிய எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள்
/
பொங்கல் விழா கொண்டாடிய எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள்
ADDED : ஜன 13, 2024 04:24 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் செயல்பட்டு வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் படிக்கும்எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள்தமிழ் பாராம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடி ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
தமிழர்களின் அறுவடைதிருநாளான பொங்கல் திருவிழா இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து படிக்கின்றனர்.
ஆண்டுக்கு 50 மாணவர்கள் வீதம் 150 மாணவர்கள் 3 ஆண்டுகளில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் படித்து வருகின்றனர். இவர்கள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், உ.பி., உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.
நேற்று இவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் மாணவர்கள் கந்த சஷ்டி கவசம், ஆன்மிகபாடல்கள் பாடி கடவுள்களை வணங்கினர்.
பின் மாணவர்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். எய்ம்ஸ் பொறுப்பு அதிகாரி டீன் அனந்தலட்சுமி உட்படபேராசிரியர்கள் பங்கேற்றனர்.