/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் ஆபத்தாக உள்ள ஏர்வால்வு தொட்டி
/
ரோட்டோரத்தில் ஆபத்தாக உள்ள ஏர்வால்வு தொட்டி
ADDED : ஆக 25, 2025 02:46 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ராமநாதபுரம் செல்லும் ரோடு மரக்கடை அருகே ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள ஏர்வால்வு தொட்டியால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் செல்வதற்காக ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டும் ஏர்வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் ராமநாத புரம் செல்லும் ரோடு மரக்கடை அருகே ஏர்வால்வு தொட்டியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மூடி அமைக்கப் பட்டது.
தற்போது மூடி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக மூடி சுத்தி கட்டை பொருட்கள் வைத்துள்ளனர்.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
இரவு நேரத்தில் ஏர்வால்வு தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் ஏர்வால்வு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.