/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவில் சுதந்திர தினம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
/
ஏர்வாடி தர்காவில் சுதந்திர தினம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
ஏர்வாடி தர்காவில் சுதந்திர தினம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
ஏர்வாடி தர்காவில் சுதந்திர தினம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
ADDED : ஆக 13, 2025 11:22 PM
கீழக்கரை: ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே தேசிய கொடியின் வண்ண வடிவமைப்பில் ஏர்வாடி தர்காவில் அலங்கார நுழைவு வாயில் பகுதி மற்றும் பள்ளிவாசல் மேல் பகுதியில் உள்ள 160 அடி உயர மினராவிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம் கூறியதாவது:
நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தில் அன்று காலை 7:00 மணிக்கு ஏர்வாடி தர்காவில் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் பாசில் உமரி தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.
தேசியக்கொடி ஏற்றி வைத்தவுடன் நமது பாரத தேசம் உலக அரங்கில் முதன்மையாக திகழவும், சிறந்த வல்லரசாக வீறுநடை போடவும், சிறப்பு பிரார்த்தனை மற்றும் துவா நிகழ்த்தப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு ஏர்வாடி தர்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்றார்.