/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் ரோட்டோர வயலில் குவியும் மதுபாட்டில்
/
நயினார்கோவில் ரோட்டோர வயலில் குவியும் மதுபாட்டில்
ADDED : டிச 28, 2024 07:22 AM

நயினார்கோவில்: பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்லும் ரோட்டோரம், சிலர் மது அருந்தி பாட்டில்களை வயலில் வீசி செல்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பரமக்குடி, எமனேஸ்வரம் வழியாக நயினார்கோவில் செல்லும் ரோடு உள்ளது. ரோட்டின் இரண்டு ஓரங்களிலும் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன.
தற்போது பருவமழை பொய்த்த சூழலில் நெல் விதைத்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் ரோட்டோரங்களில் பகல் மற்றும் இரவு பொழுதுகளில் ஆங்காங்கே மர நிழல்களில் சிலர் மது அருந்துவது தொடர்கிறது.
அப்போது காலி பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை வயல்களில் ஓரங்களில் விட்டுச் செல்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வரும் தின்பண்டங்களை சாப்பிட்ட பின்னர் அப்படியே விட்டு செல்வதால் வயல்வெளிகள் அசுத்தமாகின்றன.
ஒரு சிலர் பாட்டில்களை உடைத்து செல்லும் சூழலில் விவசாயிகளின் பாதங்களை பதம் பார்க்கிறது. எனவே நயினார் கோவில் ரோட்டோரங்களில் மது அருந்தும் சமூக விரோதிகளை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.

