/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் புதிதாக பெர்மிட் வழங்க அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் எதிர்ப்பு

ADDED : மே 20, 2025 12:40 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாத சூழ்நிலையில், மேலும் புதிதாக ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க கூடாது என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஒருங்கிணைப்புகுழுவினர் வலியுறுத்தினர்.
ராமேஸ்வரம் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் கூறியுள்ளதாவது: ராமேஸ்வரம் நகரில் தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். சாலைவிரிவாக்கம் போக்குவரத்துதிற்கான உரிய வழி தடங்களும் செய்யவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள், மீன், கருவாடு ஏற்றும் சரக்கு வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே ராமேஸ்வரத்தில் பெர்மிட்டுடன் 600 ஆட்டோக்கள் இயங்குகின்றன. வெளியூர் பெர்மிட் 300 ஆட்டோக்கள் உள்ளன. இந்நிலையில் புதிததாக ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கினால் பிரச்னை ஏற்படும், ஏற்கனவே பெர்மிட் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே புதிதாக பெர்மிட் வழங்க கூடாது, வெளியூர் பெர்மிட் ஆட்டோக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.