/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட வளம் சார்ந்த கடன் திட்டங்களுக்கு ரூ.9853 கோடி ஒதுக்கீடு

ADDED : பிப் 20, 2024 11:23 PM
ராமநாதபுரம், - ராமநாதபுரம் மாவட்டத்தில் வளம் சார்ந்த கடன் திட்டங்களுக்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.9853 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நபார்டு வங்கியின் 2024--25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். 2024-25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்திற்காக ரூ.9853 கோடியே 79 லட்சம் வங்கி கடன் அனுமதிக்கான கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
நபார்டு வங்கி மூலம் ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன்படி 2024-25ம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.6592 கோடியே 2 லட்சம், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடனுதவியாக ரூ.1403 கோடி, ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள் சக்திக்கு ரூ.1858 கோடியே 77 லட்சம் என ரூ.9853 கோடியே 79 லட்சம் வங்கி கடன் அளவிடப்பட்டுள்ளது என்றார்.
நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட இயக்கம் மேலாண்மை அலுவலர் சையித் சுலைமான், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் சர்மிளா தேவி, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் பிரதீப் பங்கேற்றனர்.