/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி வாரச்சந்தையில் வியாபாரிகள் அனைவருக்கும் கடை ஒதுக்குங்க
/
கமுதி வாரச்சந்தையில் வியாபாரிகள் அனைவருக்கும் கடை ஒதுக்குங்க
கமுதி வாரச்சந்தையில் வியாபாரிகள் அனைவருக்கும் கடை ஒதுக்குங்க
கமுதி வாரச்சந்தையில் வியாபாரிகள் அனைவருக்கும் கடை ஒதுக்குங்க
ADDED : மார் 07, 2024 10:47 AM
கமுதி: கமுதி வாரச்சந்தை வளாகத்தில் வியாபாரிகள் அனைவருக்கும் கடைகள் ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
கமுதி வாரச்சந்தை வளாகம் ரூ.1.80 கோடியில் 114 கடைகள் கட்டப்பட்டது.இரண்டு மாதத்திற்கு முன்பு கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் வாரச்சந்தையில் வியாபாரம் செய்த 70-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை.
இதனால் கடைகள் வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து அனைவருக்கும் கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
வியாபாரி முத்துக்குமார் கூறுகையில், கமுதி வாரச்சந்தை வளாகத்தில் அனைவருக்கும் முறையாக கடைகள் ஒதுக்கவேண்டும்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வாரச்சந்தையில் ஒதுக்கப்பட்ட கடை விவரங்களை ஆய்வு செய்து ஒருவருக்கு ஒரு கடை வீதம் கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.