ADDED : பிப் 04, 2024 11:28 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக, துாத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் துாத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், செயலாளர் பகுர்தீன், துணைத் தலைவர்கள் ஆசிரியை ஜோதி, ஜெயக்குமார் பங்கேற்றனர்.
