/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி ஆம்புலன்ஸ் வசதி அவசியம்

ADDED : ஜன 07, 2025 04:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளி மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் வசதியின்றி அவரை ஆட்டோவில் போலீசார் அழைத்து சென்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  மனு கொடுத்து விட்டு தனது மூன்று சக்கர டூவீலரில் வந்த மாற்றுத்திறனாளி நெஞ்சு வலியால் மயங்கி சரிந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளி யார் என்பது தெரியவில்லை. அவரது வாகன பதிவெண் வைத்து அதில் உள்ள முகவரியை விசாரித்த போது வேதாளை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ------ வாரந்தோறும் நுாற்றுக்கணக்கான அலுவலர்கள், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகின்றனர். அவர்களின் நலன்கருதி ஒருநாள் மட்டும் நிரந்தரமாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.