ADDED : பிப் 18, 2025 04:46 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா, வக்பு சட்டம், பொது சிவில் சட்ட எதிர்ப்பு மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். ம.ம.க., மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, மாநில துணைப் பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சல்மான் ரபிக் வரவேற்றார்.
கூட்டத்தில் த.மு.மு.க., சார்பில் முதுகுளத்துாரில் 215 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பிறகு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். சுதந்திர இந்தியாவில் பறிக்கப்படும் உரிமைகள் என்ற தலைப்பில் வக்பு சட்டம், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக பேசினர்.
மாவட்ட செயலாளர் சம்சுகனி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
