/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் துவக்கம்
/
த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் துவக்கம்
ADDED : அக் 18, 2024 04:59 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் ஆனந்துார் கிளை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ., அப்துல் சமது, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொது மக்கள் வசதிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.
கட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நல சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மருத்துவர் அணி மாநில பொருளாளர் அப்துல் ரபி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் பாதுஷா, யாகூப், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.