தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆம்புலன்ஸ் தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஆம்புலன்ஸ் தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஆம்புலன்ஸ் தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 31, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஆம்புலன்ஸ் 108 தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நுாறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாநில பொதுச் செயலாளர் ராஜேந்தினர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலனஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் 7000த்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். தொழிலாளர்களுக்கு 16 சதவீதத்திற்கும் குறைவாக ஊதிய உயர்வு வழங்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறி 10 சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழக அரசு ஆம்புலன்ஸ் 108 ஐ நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படுகிறது. அதே போல் 2 லட்சம் கி.மீ., க்கு மேல் ஓடிய ஆம்புலன்சை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். மக்களின் தேவைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக ஒரு ஆம்புலன்ஸ் கூட வழங்கவில்லை. கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us