/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனைத்து வசதிகளுடன் கல்வியில் சிறந்த செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி
/
அனைத்து வசதிகளுடன் கல்வியில் சிறந்த செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி
அனைத்து வசதிகளுடன் கல்வியில் சிறந்த செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி
அனைத்து வசதிகளுடன் கல்வியில் சிறந்த செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி
ADDED : ஜூன் 25, 2025 08:40 AM
ராமநாதபுரத்தில் அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய தலை சிறந்த கல்லுாரியாக செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.
கல்வி தந்தை டாக்டர் இ.எம் அப்துல்லா. தனது தாயார் செய்யது அம்மாள் பெயரில் 1964ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியை தொடங்கினார். 1976ல் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியையும் ஆரம்பித்தார்.
தொடர்ந்து செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி துவங்கப்பட்டது. செய்யது அம்மாள் அறக்கட்டளையின் வழியாக 2010ல் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி 325 மாணவர்களுடன் துவக்கப்பட்டது.
2025 -2026ல் அழகப்பா பல்கலையுடன் இணைக்கப்பட்டு 2800 மாணவர்கள், 19 பட்டப் படிப்புகளையும், ஏழு முதுகலைப் படிப்புகளையும் படிக்கின்றனர்.
ஆராய்ச்சி படிப்புகளை முடித்த அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடம் உள்ளது.
2021ம் ஆண்டின் தேசிய தர மதிப்பீட்டில் 'பி' அங்கீகாரத்தையும் 2022ம் ஆண்டில் '2 எப்'அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இலவச கணினி பயிற்சி, மாணவிகளுக்கு நவீன ஆடை வடிவமைப்பு துறையான பேஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைனிங் பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளங்கலை காட்சி ஊடகவியல் துறை, நவீன திரையரங்கு வசதிகளுடன் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
2025--26ம் ஆண்டில் இருந்து செயற்கை நுண்ணறிவியல் துறை, கடல் வாழ் உயிரியல் ஆகிய அறிவியல் இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு ஸ்கிரீன் பிரின்டிங், ஆரி ஒர்க், மெஹந்தி போன்ற இணைச் சான்றிதழ் படிப்புகளையும் மற்றும் யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்கின்றனர். வளாகத் தேர்வின் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது.
பன்னாட்டுக் கருத்தரங்கம், தேசியக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஒழுக்கத்தாலும், அறிவாலும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய தலைசிறந்த கல்லுாரியாக செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.