/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக அளவில ான கராத்தே போட்டியில் செய்யது அம்மாள் கல்லுாரி மாணவி சாதனை

ADDED : ஜன 04, 2024 02:05 AM

ராமநாதபுரம்: உலகளவில் புருனேயில் நடந்த 2023 சீனியர் பிரிவு கராத்தே போட்டியில், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை - அறிவியல் கல்லுாரி மாணவி அல் நஸிமா மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வெற்றுள்ளார்.
சிட்டோகாய் அசோசியேஷன் புருனே தருசலாம்-2023 - நிறுவனம் சார்பில், உலகளவில் 2023-சீனியர் பிரிவிற்கான ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடந்தது. இந்தியா, மலேசியா, கம்போடியா, புருனே, தாய்லாந்து, உள்ளிட்ட 15 நாடுகள் பங்கேற்றன.
இதில், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை- அறிவியல் கல்லூரி மாணவி அல் நஸிமா மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வென்று இந்தியாவிற்கும், தமிழகம், கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.சாதித்துள்ள மாணவி மற்றும் பயிற்சி அளித்த உமர்முக்தார் ஆகியோரை கல்லுாரி தாளாளர், செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையின் டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக், முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.