ADDED : செப் 07, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் வடக்கு வாசல் செல்வி அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செய்து, நேற்று காலையில் கடம்புறப்பாட்டுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
பின் வடக்கு வாசல் செல்வி, அரியநாச்சி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.