/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் வாறுகால்வாய்
/
பள்ளி அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் வாறுகால்வாய்
பள்ளி அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் வாறுகால்வாய்
பள்ளி அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் வாறுகால்வாய்
ADDED : மார் 05, 2024 04:16 AM
சாயல்குடி : -சாயல்குடி அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் அருகே திறந்தவெளி கழிவுநீர் வாறுகால்வாய் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது.
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் துவக்கப்பள்ளி அமைந்துஉள்ளது. இதன் அருகே கழிவு நீர் வாறுகால்வாய் செல்கிறது.
அவற்றின் மீது மூடிகள்இல்லாமல் நான்கு அடி ஆழத்தில் ஆபத்தான நிலையில் திறந்த நிலையில் உள்ளதால் மாணவர்களுக்கு ஆபத்து
பெற்றோர்கள் கூறியதாவது:
திறந்தவெளியில் கழிவு நீர் வாறுகால் செல்வதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பகலிலும் கடிக்கும் நிலை உருவாகியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர்.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் பாதுகாப்பான சிமெண்ட் மூடிகளை வாறுகால்வாயின் மீது மூடி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.