/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு பணிக்கு தோண்டிய பள்ளத்தில் பழங்காலப்பொருட்கள் கண்டெடுப்பு; அகழ்வாராய்ச்சி செய்ய வலியுறுத்தல்

ADDED : ஆக 19, 2025 01:18 AM

கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூரில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் செங்கமேட்டில் ரோடு பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் பழமையான பானை ஓடுகள் உட்பட பழங்கால பொருட்கள் கிடைத்தன. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பேரையூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி கூறியதாவது: கமுதி அருகே பாக்குவெட்டி, ஆனையூர், மருதங்கநல்லுார்,பேரையூர் உள்ளிட்ட பகுதியில் பலமாதங்களாகவே பழங்கால பொருட்கள் கண்டறியப்படுகின்றன. சிலநாட்களுக்கு முன் ரெகுநாத காவிரி வரத்து கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நந்தி சிலை 13ம் நுாற்றாண்டை சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சிலை கிடைத்துள்ளது. இதேபோன்று மருதங்கநல்லுார் பகுதியில் 10ம் நுாற்றாண்டை சேர்ந்த முற்காலபாண்டியர் காலத்து சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி பார்வதியின் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தற்போது ஆனையூர் கிராமத்தில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் புதிதாக ரோடு அமைக்கும் பணி நடந்தது. அப்போது தோண்டப்பட்ட பள்ளங்களில் ஏராளமான சீன பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், பழங்கால செங்கல் கற்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. பேரையூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பழமையான பொருட்கள் கிடைக்கின்றன. எனவே தமிழக தொல்லியல்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து பழமையான பொருட்களை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.