/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொன்மை பொருட்களை அந்தந்த இடத்திலேயே பாதுகாக்க வேண்டும்
/
தொன்மை பொருட்களை அந்தந்த இடத்திலேயே பாதுகாக்க வேண்டும்
தொன்மை பொருட்களை அந்தந்த இடத்திலேயே பாதுகாக்க வேண்டும்
தொன்மை பொருட்களை அந்தந்த இடத்திலேயே பாதுகாக்க வேண்டும்
ADDED : ஆக 20, 2025 11:23 PM
பரமக்குடி : -கிராம, நகர பகுதிகளில் கண்டெடுக்கப்படும் தொன்மையான பொருட்களை அந்தந்த இடத்திலேயே பாதுகாக்க வேண்டும், என மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சமண உறுப்பினர் பொன்ராஜேந்திரபிரசாத் தெரிவித்தார்.
மேலும் கூறிய போது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏராளமான தொன்மையான சிலைகள், சிற்பங்கள், கிணறுகள் கண்டெடுக்கப்படுகிறது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பம் வயல்வெளியில் இருந்து எடுக்கப்பட்டது. இதனை அங்கேயே வைத்து பாதுகாக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசின் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அங்கமான தொல்லியல் துறை இயக்குநரின் 2023 பிப்.3ம் தேதியிட்ட அரசாணை எண் 49 வெளியிடப்பட்டது.
இதில், ஒவ்வொரு கிராமங்களிலும் பண்டைய தொன்மங்களை பறைசாற்றுகின்ற வகையில், அந்தந்த ஊரின் பழமை, வரலாறு, பெருமை ஆகியவற்றை எடுத்துக் கூறுகின்ற பொருட்கள் கிடைக்கப்பெறுகிறது. இதன்படி உதிரி சிற்பங்கள், கல்வெட்டுகள், குமிழிகள், மதகுகள், கிணறுகள் உள்ளிட்ட கலைச் செல்வங்களை கண்டறிந்து முப்பரிமாண வடிவில் மின் உருவாக்கம் செய்து அதே இடத்திலோ அல்லது அந்த ஊரிலோ பாதுகாப்பான முறையில் வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.