/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை
/
மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை
ADDED : அக் 15, 2025 12:51 AM

சிக்கல்; சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் மகாவீரரின் சிலை உள்ளது.
சமண மதத்தில் தீர்த்தங்கரர் என்பவர் மறுபிறவி என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு மற்றவர்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாக திகழ்கின்றனர். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் இருந்திருக்கிறார்கள். தீர்த்தங்கரர் சிலைகளை வணங்குவது ஒரு வழி. சிலைகள் மூலம் போதனைகளை நினைவூட்டுகின்றன. சிலைகளை வணங்குவதன் மூலம் அவர்களின் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக சிலை வடிவமைப்புகள் உள்ளன.
அதன்படி 24வது தீர்த்தங்கரராக உள்ள மகாவீரர் 6ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். மேலக்கிடாரத்தில் மூன்று அடி நீள, அகலம் கொண்ட தீர்த்தங்கரரின் சிலை உள்ளது. சிலையின் இருபுறமும் வெண்சாமரம் வீசக்கூடிய இயக்கியர் உள்ளனர். தியான நிலையில் கண்களை மூடி நிர்வாண நிலையில் தவமிருக்கும் சிலை உள்ளது.
மேலக்கிடாரத்தில் 2016ம் ஆண்டு மகாவீரரின் சிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மதுரையில் உள்ள சமண மத வழிபாட்டாளர்களின் சார்பில் அச்சிலையை மீட்டெடுத்து சிறிய மண்டபத்தில் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பிட்ட நாட்களில் சமண மத பெரியோர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மகாவீரரின் போதனைகள் அப்பகுதியில் வழிகாட்டி போர்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த மகாவீரரின் சிலையை பலர் பார்வையிட்டு செல்கின்றனர்.