/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கக்கடலில் ஆந்திர கப்பல் மாயம் * 12 மாலுமிகள் கதி என்ன
/
வங்கக்கடலில் ஆந்திர கப்பல் மாயம் * 12 மாலுமிகள் கதி என்ன
வங்கக்கடலில் ஆந்திர கப்பல் மாயம் * 12 மாலுமிகள் கதி என்ன
வங்கக்கடலில் ஆந்திர கப்பல் மாயம் * 12 மாலுமிகள் கதி என்ன
ADDED : ஏப் 26, 2025 02:01 AM
ராமேஸ்வரம்:வங்கக்கடலில் பயணித்த ஆந்திர மாநில சரக்கு கப்பல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமானதால் அதிலுள்ள 12 மாலுமிகளின் கதி என்ன என தெரியவில்லை.
ஏப்.,20ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் கேரளா கொச்சின் செல்ல புறப்பட்டது. கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 12 மாலுமிகள் பயணித்தனர். இக்கப்பல் சென்னை, புதுச்சேரி வழியாக பாம்பன் ரயில் பாலத்தை கடந்து கேரளா செல்ல இருந்தது. ஏப்., 22ல் புதுச்சேரி வந்த காலியான சரக்கு கப்பல் அங்கிருந்து புறப்பட்டு வங்க கடல் வழியாக ஏப்., 23ல் பாம்பன் கடற்கரை வர வேண்டும். ஆனால் நேற்று மாலை வரை பாம்பனுக்கு வரவில்லை. புதுச்சேரியில் புறப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்கு பின் கப்பலில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
மூன்று நாட்கள் ஆன நிலையில் இக்கப்பலின் நிலை என்ன என தெரியவில்லை. ஒருவேளை கப்பலில் இயந்திரம் மற்றும் தகவல் தொடர்பு கருவி பழுதாகி இலங்கையில் தஞ்சம் அடைந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் உள்ள 12 மாலுமிகளின் கதி என்ன ஆனது என்றும் தெரியவில்லை. மாயமான கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.