ADDED : டிச 03, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுாரில் இ--சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் இ--சேவை மையம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இ-சேவை மையத்தை அங்கன்வாடி மையமாக பயன்படுத்தி வருகின்றனர். இ--சேவை மையத்தில் 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி பணியாளர் உள்ளார்.
எனவே புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காம்பவுண்டு பாதுகாப்பு கட்டமைப்பு வசதி அவசியம் வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

