ADDED : மார் 29, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை சப் கலெக்டர் அபிலாஷா கவுர் திறந்து வைத்தார்.
வலையபூக்குளத்தில் கோவை ஜி.கே.டி.,அறக்கட்டளை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
தாசில்தார் காதர் முகைதீன், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கட்டடத்தை திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் சரசு மற்றும் ஜி.கே.டி., தொண்டு அறக்கட்டளை பணியாளர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.