/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
/
சேதமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 14, 2025 11:39 PM
சிக்கல்: சிக்கல் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கான கட்டடம் இல்லாததால் மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி கட்டடத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
சேதமடைந்து விபத்திற்கு வழி ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டடத்தால் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் அச்சம் அடைகின்றனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள அங்கன்வாடியில் கட்டடம் இல்லாததால் மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் இயங்கி வருகிறது. அக்கட்டடமும் சேதமடைந்த நிலையில் குழந்தைகள் அச்சத்துடன் படிக்கின்றனர்.
எனவே கடலாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க அல்லது புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.