/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மையத்தில் சிமென்ட் சீட் கூரையால்... குழந்தைகள் அவதி; சாயல்குடி, திருப்புல்லாணிக்கு புதுசா கட்டித்தாங்க

ADDED : அக் 28, 2024 04:56 AM

சாயல்குடி: சாயல்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டடம் மற்றும் சேதமைடந்த கட்டடம் சிமென்ட் சீட் கூரையில் இயங்குவதால் அங்கு படிக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெயில், மழைக்காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
சாயல்குடி சதுரயுகவல்லிநகர் பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கான அரசு கட்டடம் இல்லாததால் சிமென்ட் சீட் போட்ட தனியார் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு 20 குழந்தைகள், ஒரு மையப் பொறுப்பாளர் உள்ளனர்.
மூன்று புறமும் தகர சீட் அடைக்கப்பட்ட கூடாரம் மற்றும் சிமென்ட் சீட் கூரையுடன் உள்ள கட்டடத்தில் குழந்தைகள் உள்ளனர். இதனால் வெயில், மழைக் காலங்களில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அங்கன்வாடி மையத்திற்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கிஅங்குபுதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* திருப்புல்லாணி அருகே கொதக்கோட்டை ஊராட்சி வள்ளிமாடன் வலசையில் கடந்த 1987ல் அங்கன்வாடி மையம் சிமெண்ட் கூரை சீட்டில் இயங்கி வருவதால் வெயில்காலத்தில் வெப்பசலனம் மற்றும் மழை காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு கட்டடத்தின் ஊடே வழிந்து ஓடுவதால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
எனவே பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் எழுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அருகே 1 முதல் 5 வகுப்பு கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். எனவே பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.