/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி குழந்தைகள்: பெற்றோர் அச்சம்
/
முதுகுளத்துாரில் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி குழந்தைகள்: பெற்றோர் அச்சம்
முதுகுளத்துாரில் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி குழந்தைகள்: பெற்றோர் அச்சம்
முதுகுளத்துாரில் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அங்கன்வாடி குழந்தைகள்: பெற்றோர் அச்சம்
ADDED : பிப் 17, 2024 10:54 PM

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் கட்டட வசதி இல்லாததால் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளாக மரத்தடியில் படிக்கின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது கட்டடம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி அருகே வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு போதுமான இடவசதி இல்லாததால் குழந்தைகளை மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.பெற்றோர் தங்கபாண்டியன் கூறியதாவது:
முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்தனர். கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
தற்போது போதுமான இடவசதி இல்லாத இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் வெயில், மழைக்காலங்களில் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு உடலில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்ந்து குழந்தைகள் மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை தொடர்கிறது. கர்ப்பிணிகளுக்கும் முறையாக சத்துணவு மாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதமில்லாத கட்டடம் தற்போது வரை இடிக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குழந்தைகளின் நலன் கருதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.