/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காற்றோட்டம் இல்லாத சிமென்ட் கூரை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : நவ 10, 2025 12:29 AM

கடலாடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் வடக்கு தெரு பத்ரகாளி அம்மன் கோயில் அருகே சுற்றிலும் அடைக்கப்பட்ட சிமென்ட் கூரை செட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் ஒரு சமையலர், ஒரு பொறுப்பாளர் பணிபுரிந்து வருகின்றனர். வெயில் காலங்களில் காற்றோட்டம் ஏதுமின்றி புழுக்கமாக வியர்வை கொட்டி வரும் சூழலில், புறா கூண்டு போல செயற்கையான சூழலில் இயங்கும் இக்கட்டடத்தில் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். கடலாடி பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
கன்னிராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் இயங்கக்கூடிய அங்கன்வாடி மையத்தில் எப்படி குழந்தைகள் படிக்கின்றனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. கடலாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் இது போன்ற கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி கட்டடத்தை பார்வையிட வேண்டும். வெளிச்சம் தரக்கூடிய காற்றோட்டத்துடன் கூடிய அங்கன்வாடி மையத்தை முறையாக அமைக்க வேண்டும் என்றார்.