/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சுகோட்டை கண்மாயின் கால்வாய் பராமரிப்பின்றி நீர்செல்வதில் சிக்கல்

ADDED : ஜன 01, 2024 05:24 AM

திருவாடானை: பல கண்மாய்களை இணைக்கும் அஞ்சுகோட்டைகண்மாய் வரத்துக் கால்வாயில் செடிகள் அடர்ந்துள்ளதால் நீர் சுலபமாக செல்லமுடியாமல் தேங்கியுள்ளது.
திருவாடானை அஞ்சுகோட்டை கண்மாயிலிருந்து மழை நீர் வெளியேறும் வகையில் வரத்துக் கால்வாய் உள்ளது. இக் கால்வாய் ஆதியூர், குளத்துார், அரும்பூர், திருவெற்றியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களை இணைக்கும் வகையில் உள்ளது.
இந்த வரத்துக் கால்வாய் மூலம் செல்லும் நீர் அக் கண்மாய்களை நிரப்பிவிட்டு, மீதமுள்ள நீர் வீரசங்கலிமடம் வழியாக சென்று கடலில் கலக்கும்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக் கால்வாய் துார்வாரி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் செடிகள் அடர்ந்து புதர் மண்டியுள்ளது. ஆக்கிரமிப்பால் அகலமான இக்கால்வாய் தற்போது குறுகிவிட்டது. இதனால் அஞ்சுகோட்டை கண்மாயிலிருந்து வெளியேறும் மழை நீர் சுலபமாக செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
சீமைகருவேல செடிகள் அடர்ந்து புதர் மண்டியுள்ளது.
இக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.