அண்ணா பல்கலை கல்லுாரி சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
அண்ணா பல்கலை கல்லுாரி சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
UPDATED : நவ 23, 2026 06:02 PM
ADDED : நவ 23, 2026 06:02 PM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. விபத்திற்கு முன்னதாக சீரமைக்க வேண்டும்.
தேவிபட்டினம் அருகே புல்லங்குடியில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கல்லுாரியின் சுற்றுச்சுவர் மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால், சுவர் இடிந்து விழுவதை தற்காலிகமாக தடுக்கும் விதமாக, சுவருக்கு இரும்பு பைப்புகளால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது, மூன்றடுக்கு பாதுகாப்புடன், ஓட்டு என்னும் மையமாக செயல்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்லுாரி சுற்றுச்சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
