ADDED : மார் 09, 2024 08:21 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : நொச்சிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.வட்டாரக் கல்வி அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.
எண்ணும் எழுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினசேகர், வட்டாரக் கல்வி அலுவலர் மல்லிகா, ஊராட்சி தலைவர் சசிகலா, ஆசிரியர் பயிற்றுனர்கள் முனீஸ்வரி, சோபனா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மரியகிரேசி நன்றி கூறினார். நொச்சி வயல் கிராம மகளிர் மன்றம், இளைஞர் மன்றத்தினர் பள்ளிக்கு பொருட்கள் வழங்கினர்.
