ADDED : ஏப் 27, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி மவுன்டைன் வேர்ல்ட் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆண்டு விழா நடந்தது. சேர்மன் பூமிநாதன் தலைமை வகித்தார். அகாடமி சேர்மன் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆரோக்கியதாஸ், ஆயிரவைசிய சபை தலைவர் பாலுச்சாமி, இணை தலைவர் போஸ் மாணவர்களுக்கு பரிசளித்தனர்.
பள்ளி துணைச் சேர்மன் சுப்பிரமணியன், பொருளாளர் மணிவண்ணன் வாழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகள் உட்பட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் நாகரத்தினம் நன்றி கூறினார்.
